News May 3, 2024
இவர்கள் குறித்து தெரிந்தால் உடனே தெரிவிக்கலாம்!

சேந்தமங்கலத்தில் டாஸ்மாக் ஊழியர் பனரோஜா மற்றும் 3 பேரை, பைக்கில் முகத்தை மூடிக்கொண்டு வந்த மர்ம நபர்கள் 6 பேர் அரிவாளால் தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 6 குழுக்களை அமைக்கப்பட்டது. இந்நிலையில் குற்றவாளிகளின் போட்டோவை போலீசார் வெளியிட்டுள்ளனர். தகவல் தெரிந்தால் போலீசாருக்கு உடனடியாக தெரிவிக்கவும் அறிவுறுத்தி உள்ளனர்.
Similar News
News December 7, 2025
நாமக்கல்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு நாமக்கல் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்!
News December 7, 2025
மாணிக்கம்பாளையம் அருகே பைக் மோதி விபத்து!

மாணிக்கம்பாளையம் அடுத்த புள்ளாகவுண்டம்பட்டி அருகே நேற்று இரவு (டிச.06) 10 மணியளவில் இறுதி சடங்கு செய்து கொண்டிருந்த அப்பகுதி மக்களின் மீது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் 15 பேர் பலத்த காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த எலச்சிபாளையம் காவல்துறையினர் காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 7, 2025
நாமக்கல்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க


