News April 10, 2025
இளைஞர் விருது விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது

திண்டுக்கல் மாவட்டத்தில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற www.sdat.tn.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.விபரங்களுக்கு. மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 7401703504 என்ற கைப்பேசி வாயிலாகவோ சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம். என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்
Similar News
News December 12, 2025
வத்தலகுண்டில் கார்–டூவீலர் மோதி விபத்து; ஒருவர் படுகாயம்

வத்தலகுண்டு–திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 10 மணியளவில் மகேந்திரா கார், டூவீலரை நேருக்கு நேர் மோதியது. இதில் டூவீலரில் பயணித்த சதீஷ்குமார் படுகாயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளார். விபத்தினால் அப்பகுதியில் தற்காலிகமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்துக்கு காரணமான கார் டிரைவர் விபத்துக்குப் பிறகு இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 12, 2025
திண்டுக்கல்: ரூ.56,900 சம்பளத்தில் வேலை! APPLY NOW

மத்திய அரசு உளவுத்துறையில் தற்போது காலியாகவுள்ள 362 Multi Tasking Staff (General) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு 10th தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.18,000 முதல் 56,900 வரை வழங்கப்படும். இந்த வேலைக்கு மூன்று கட்ட தேர்வுகளின் அடிப்படையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இப்பணிக்கு வரும் டிச.14ம் தேதிக்குள் இந்த<
News December 12, 2025
திண்டுக்கல்: கேன் தண்ணீர் வாங்குவோர் கவனத்திற்கு!

திண்டுக்கல் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. ஷேர் பண்ணுங்க.


