News August 14, 2024

இளைஞர் உயிரிழப்பு: ஐந்து நபர்கள் மீது வழக்குப்பதிவு

image

மயிலாடுதுறை அருகே எலந்தங்குடி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது பாலம் கட்டுமான பணியில் விழுந்து கம்பி சொருகி இளைஞர் மணிகண்டன் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மணிகண்டன் தந்தை இளங்கோவன் அளித்த புகாரின் அடிப்படையில் ஐந்து நபர்கள் மீது இன்று பெரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே உதவி திட்ட மேலாளர் நாகராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Similar News

News December 13, 2025

மயிலாடுதுறை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

image

மயிலாடுதுறை மக்களே ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இத்திட்டம் இம்மாத (31/12/2025) இருதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை LIKE செய்து SHARE பண்ணுங்க!

News December 13, 2025

மயிலாடுதுறை: பயிா் சேதம் கணக்கெடுப்பு பணி ஆய்வு

image

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாரத்தில், கனமழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களின் சேதம் குறித்து, வேளாண்மை இணை இயக்குநர் விஜயராகவன் நேரில் ஆய்வு செய்தார். இதில் 14 உதவி வேளாண்மை அலுவலர்கள் இந்த பணியில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களின் வயலை கணக்கெடுப்பில் சேர்க்க உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News December 13, 2025

மயிலாடுதுறை: மக்களே உடனடி தீர்வு வேண்டுமா?

image

மயிலாடுதுறை மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்கள் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <>TN Smart என்ற இணையதளத்தின்<<>> மூலம் உங்கள் மாவட்டம், வட்டம், கிராமத்தை தேர்வு செய்து பிரச்சனைகளை நீங்களே அரசுக்கு நேரடியாக புகார் கொடுக்க முடியம். உங்கள் புகார் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!