News August 15, 2024
இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி

ஈரோடு மாவட்டம் கனரா வங்கியின் மூலம் 18 வயதிலிருந்து 45 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் சுயதொழில் தொடங்குவதற்காக கோழி வளர்ப்பு பயிற்சி 10 நாட்கள் இலவசமாக உணவு உடையுடன் வழங்குகின்றன. இப்பயிற்சியானது ஈரோட்டில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றுபவர்களும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
Similar News
News October 27, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

ஈரோடு பகுதி மக்களுக்கு மாவட்ட காவல்துறை சார்பாக ஆன்லைன் டேட்டிங் செயலிகளில் சைபர் கிரைம் மோசடிகள் நடைபெறுகின்றன. அதில் குற்றவாளிகள் போலி அடையாளங்களை உருவாக்கி, அறிமுகமில்லாதவர்களுடன் பேசி பணம் பறிக்கிறார்கள். இந்த மோசடிகளில் இருந்து தப்பிக்கவும், சந்தேகம் ஏற்படும்போது எச்சரிக்கையாக இருக்கவும், மாவட்ட காவல்துறை சார்பில் இலவச விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இலவச தொலைபேசி எண்ணை 1930 தொடர்பு கொள்ளலாம்.
News October 27, 2025
ஈரோடு: உங்கள் பகுதியில் நாளை மின்தடையா?

மாதாந்திர மின் பராமரிப்பு பணி காரணமாக கவுந்தப்பாடி, தண்ணீர்பந்தல், கணபதிபாளையம், புங்கம்பள்ளி, சூரியம்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கவுந்தப்பாடி, கொளத்துப்பாளையம், சிங்காநல்லூர், வேலம்பாளையம், அவல்பூந்துறை, பாசூர், தேசிபாளையம், புங்கம்பள்ளி சுங்கக்காரன்பாளையம், காந்திநகர், பச்சப்பாளி பெரியபுலியூர், மரப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.
News October 27, 2025
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம்!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் மட்ட நிலவரம்;
இன்று அக்டோபர்-27 மதியம் 12 மணி நிலவரப்படி வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 27.82 (33.46) அடியாகவும், பவானிசாகர் அணை நீர்மட்டம் 102 (105) அடியாகவும் உள்ளது. பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 30.84 அடியாகவும்,
குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 41.75 ஆகிய இரண்டு அணைகள் முழு கொள்ளளவையும் எட்டியுள்ளது.


