News October 23, 2024
இளம் சாதனையாளர்களுக்கான பிரதமர் கல்வி உதவித்தொகை!

மதுரை மாவட்டத்தில் இளம் சாதனையாளர்களுக்கான பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தில் உதவிபெற இணையதளத்தில் வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். 2024-25ம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் வெளியிட்டுள்ள பள்ளிகளில் பயிலும் தமிழக மாணவர்களுக்கு இவ்வுதவித் தொகை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு (scholarships.gov.in, https://socialjustice.gov.in) அனுகலாம்.
Similar News
News November 6, 2025
மதுரை: சாலையில் ஆறாக ஓடிய பெட்ரோல்

வாடிப்பட்டி அருகே வடுகபட்டி கட்டக்குளம் இடையில் கப்பலூரில் இருந்து, வேடசந்தூருக்கு 20 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் லோடு ஏற்றிக்கொண்டு சக்திவேல் என்பவர் ஓட்டிவந்த லாரி, திடீரென்று எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது. இதனால் பெட்ரோல் முழுதும் வடிந்து ஆறாக ஓடியது. வாடிப்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
News November 6, 2025
மதுரை: பள்ளி மாணவி சுருண்டு விழுந்து பலி

மதுரை அருகே செக்கானூரணியை சேர்ந்தவர் ஆஷிகா(14). இவர் செக்கானூரணி பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். கல்லீரல் சம்பந்தமான நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செக்கானூரணி போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 6, 2025
மதுரை மக்களே இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க
⁍மதுரை: 9445000335
⁍மதுரை வடக்கு: 9445000336
⁍ மத்திய மதுரை: 9445000338
⁍மதுரை மேற்கு: 9445000339
⁍மதுரை கிழக்கு: 9445000340
⁍மேலூர்: 9445000341
⁍வாடிப்பட்டி: 9445000342
⁍உசிலம்பட்டி: 9445000343
⁍திருமங்கலம்: 9445000344
SHARE பண்ணி மற்றவர்களுக்கு தெரியபடுத்துங்க!


