News April 24, 2025

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

image

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்(30). இவருடைய மனைவி சீதாலட்சுமி (29). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில் சீதாலட்சுமிக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டது. கணவருக்கும் சரிவர வேலை இல்லாத நிலையில் தனக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டதை அறிந்து மனமுடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Similar News

News December 4, 2025

தென்காசி மக்களே மிஸ் பண்ணாதீங்க.. கலெக்டர் அறிவிப்பு

image

தென்காசி மாவட்டம், புளியங்குடி வீராசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில் 13.12.2025 அன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற தனியார்துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் Candidate Login-ல் தங்களது சுயவிவரங்களை பதிவு செய்து கொள்ள ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 4, 2025

தென்காசி: 10th தகுதி., மத்திய அரசில் 25,487 காலியிடங்கள்!

image

தென்காசி மக்களே, மத்திய அரசின் Constable (GD) பணிக்கு 25,487 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பிய 10வது தேர்ச்சி பெற்றவர்கள் டிச 31க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.21,700 – ரூ.69,100 வரை வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் ஆட்கள் நியமனம் செய்யப்படுவர். மத்திய அரசின் மிக பெரிய வேலைவாய்ப்பு. அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News December 4, 2025

தென்காசி: கொலை வழக்கில் 14 பேருக்கு இரட்டை ஆயுள்

image

ஆலங்குளம் அருகே புதுப்பட்டி காசிநாதபுரத்தில் சாமி கும்பிடுவதில் வரி வசூல் செய்வதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மணிவேல் என்பவர் 2015-ல் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கு தென்காசி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஊர்தலைவர் விநாயகம், உலகநாதன், சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட 14 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.

error: Content is protected !!