News April 27, 2025
இளம்பெண் தற்கொலை மாமியார், கணவன் இருவர் கைது

மணவாளன் கரையில் நேற்று (ஏப்.25) ஜெய அற்புதம் என்ற இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் ஜெய அற்புதம் தாயார் மாரிக்கண்ணு காவல்துறையில் புகாரளித்தார். இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த திருமயம் காவல்துறை தற்கொலைக்கு துண்டியதாக ஜெயா அற்புதம் மாமியார் வள்ளிக்கண்ணு மற்றும் அவரது கணவர் வீரமணி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
Similar News
News July 11, 2025
புதுகை: பயிர் காப்பீடு திட்டத்தில் பதிய அறிவுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் குருவை மற்றும் காரிப் பயிர்களுக்கு ஜூலை 31ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். இந்த திட்டத்தில் பயிர் கடன் பெறும் விவசாயிகள், கடன் பெறும் வங்கிகளிலும், கடன் பெறாத விவசாயிகள் பொதுசேவை மையங்கள் மூலமாகவோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வணிக வங்கிகள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். (ஷேர் பண்ணுங்க)
News July 10, 2025
புதுகையில் நாளை வேலைவாய்ப்பு முகாம்!

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், நாளை (ஜூலை 11) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், காலை 10 முதல் 15 மேற்பட்ட முக்கிய நிறுவனங்கள் பங்கேற்கும். இம்முகாமில் 18 முதல் 35 வயதுக்குள்பட்ட 10ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் மு.அருணா தெரிவித்துள்ளார். இதை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்..!
News July 10, 2025
புதுகை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் வரை காப்பீடு

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்