News April 7, 2025
இளம்பெண்ணை கடத்திய சென்னை போலீஸ்காரர்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்த விவசாயி மகளான 24 வயது இளம்பெண், எம்.ஏ. பட்டதாரி. இவர் கடந்த 3ஆம் தேதி இரவு திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை போலீசில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 5) புகார் கொடுத்தார். அதில், அதே கிராமத்தைச் சேர்ந்த சென்னையில் போலீசாக பணிபுரியும் ரவிச்சந்திரன் (34) என்பவர் அப்பெண்ணை கடத்திச் சென்று இருக்கலாம் என தற்போது சந்தேகம் எழுந்துள்ளது.
Similar News
News December 12, 2025
தி.மலைக்கு வந்த நடிகை ஆண்ட்ரியா

திருவண்ணாமலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையார் அருளை பெறுகின்றனர். இத்தகைய பிரசித்து பெற்ற கோயிலில் திரை பிரபலங்களும் அரசியல் ஆளுமைகளும் சாமி தரிசனம் செய்ய வருவதுண்டு. இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயியில் (டிச.11) நேற்று நடிகை ஆண்ட்ரியா சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
News December 12, 2025
தி.மலையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை!

தி.மலை, அண்ணாமலையார் கோயில் தீபத் திருவிழாவை முன்னிட்டு டிச.3ம் தேதி மாவட்டத்தில் உள்ள மாநில அரசின் ஆளுகைக்கு உட்பட்டு இயங்கும் அனைத்து அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும், அரசு சார்புடைய நிறுவனங்களுக்கும் உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால், அந்த உள்ளுர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நாளை டிச.13ம் தேதி வேலை நாள் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். எனவே நாளை பள்ளிகள் இயங்கும்.
News December 12, 2025
தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக நேற்று இரவு – இன்று (டிச:12) காலை வரை ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க!


