News August 16, 2024

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை – கைது

image

வையம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுப்படட்டி துறுக்கன்குளம் அருகே மனவளர்ச்சி குன்றிய பெண் ஒருவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, பிச்சைமணியாரத்தை சேர்ந்த ஜார்ஜ் ஞான ஸ்டீபன் என்பவர் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து பெண்ணின் தாயார் மணப்பாறை மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பின்னர், போலீசார் ஜார்ஜ் ஞானஸ்டீபனை கைது செய்தனர்.

Similar News

News November 30, 2025

திருச்சி மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு

image

திருச்சி மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், லால்குடி பகுதி கல்லக்குடி 43.4 மில்லி மீட்டர், லால்குடி 38.4 மில்லி மீட்டர், புள்ளம்பாடி 61.6 மில்லி மீட்டர், தேவி மங்கலம் 27.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும், சமயபுரம் 44 மில்லி மீட்டர், சிறுகுடி 30 மில்லி மீட்டர், நாவலூர் கொட்டுப்பட்டு 16.5 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.

News November 30, 2025

திருச்சி: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>இங்கு கிளிக்<<>> செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 30, 2025

திருச்சி: ஆதாரில் திருத்தம் செய்வது இனி ரொம்ப ஈஸி.!

image

திருச்சி மக்களே, ஆதார் அட்டையில் உங்களது பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <>’இங்கே கிளிக்’<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க

error: Content is protected !!