News August 15, 2024
இளநிலை உதவியாளருக்கு நற்சான்று வழங்கிய ஆட்சியர்

கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 78வது சுதந்திர தின விழாவில் கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வரும் ராஜமாணிக்கம் என்பவர் சிறப்பாக பணியாற்றியமைக்கான நற்சான்றிதழை இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்திடமிருந்து பெற்றுக் கொண்டார்
Similar News
News January 9, 2026
கள்ளக்குறிச்சி: மருத்துவ அவசரமா? WhatsApp-ல் தீர்வு!

கள்ளக்குறிச்சி மக்களே.. தலைவலி, காய்ச்சல், தீக்காயம், உடல்நல அறிகுறிகள் உட்பட அனைத்து கேள்விகளுக்கும் உங்க WhatsApp-லேயே தீர்வு காண முடியும். <
News January 9, 2026
போக்குவரத்து நெரிசலில் தவிக்கும் கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி நகரின் முக்கிய பகுதிகளில் இருசக்கர வாகனங்களை சீரற்ற முறையில் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்லும் ஊழியர்கள் தாமதத்திற்கு உள்ளாகின்றனர். அவசர தேவைக்காக வரும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களும் செல்ல முடியாமல் சிரமம் ஏற்படுகிறது.
News January 9, 2026
கைலாசநாதர் ஆலயத்தில் கோ பூஜை

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை ஸ்ரீ காமாட்சி அம்மை சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் இன்று சிறப்பு கோ பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் பசு மீது பெண்கள் மஞ்சள் சந்தனம், குங்குமம் அரிசி உள்ளிட்ட பொருட்களால் அர்ச்சனை செய்ததுடன், சிவாச்சாரிகள் வேதங்கள் ஓத பூஜை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


