News March 25, 2025
இலவச வீடு கட்டி கொடுத்த மாற்றுத்திறனாளிகள் சங்கம்

கமுதி, கல்லுப்பட்டியை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி கமலக்கண்ணன்(45). திருமணம் முடிந்து சுப்புலட்சுமி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். மாற்றுத்திறனாளியான கமலக்கண்ணன் பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வந்தார். இதையடுத்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் இலவசமாக வீடு கட்டி கொடுக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடந்தது. *ஷேர்
Similar News
News April 18, 2025
ரூ.30 கோடி மதிப்பிலான ரிசார்ட்க்கு சீல்

கொல்கத்தாவை சேர்ந்த டிஎம் ட்ரேடர்ஸ், கேகே ட்ரேடர்ஸ் ஆகிய 2 நிறுவனங்கள் போலி நிறுவனங்களை உருவாக்கி அன்னிய செலாவணி வணிகத்தில் ஈடுபடுவதாக ஏமாற்றி ரூ.270 கோடி மோசடி செய்தனர். வழக்கை விசாரித்த கொல்கத்தா ED அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்ட நிறுவனத்திற்கு சொந்தமான ராமேஸ்வரத்தில் உள்ள ரூ.30 கோடி மதிப்புள்ள தனியார் சொகுசு விடுதியின் 60 அறைகளுக்கு கொல்கத்தா அமலாக்க பிரிவு அதிகாரிகள் சீல் வைத்து நோட்டீஸ்.
News April 18, 2025
ராமநாதபுரம்: ரயில் பயணிகளுக்கு பிரத்யேக செயலி (APP)

ரயில்களில் பயணம் செய்யும் போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை உட்பட பல்வேறு இன்னல்களுக்கும், மருத்துவ உதவி உட்பட பல்வேறு உதவிகளுக்கும், ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்தியேக செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. *RAIL MADDED* என்ற அப்ளிகேஷனை இந்த <
News April 18, 2025
சாலையை கடக்க முயன்றவர் மீது அரசு பஸ் மோதி பலி

பாம்பன் சின்னப்பாலம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (40). நேற்று மாலை பாம்பன் பகுதியிலிருந்து அரசு பஸ்சில் ராமநாதபுரம் சென்றார். போதையில் பிரச்னை செய்ததால், இவரை வேதாளை பஸ் நிறுத்தத்தில் கண்டக்டர் இறக்கி விட்டார். அங்கு சுற்றித் திரிந்த ஆறுமுகம் நேற்றிரவு (ஏப்-17) சாலையை கடக்க முயன்ற போது அரசு பஸ் மோதி இறந்தார். இது குறித்து மண்டபம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.