News April 25, 2025

இலவச பஸ் பாஸ் பெற அழைப்பு

image

கோவை கலெக்டர் பவன்குமார் நேற்று விடுத்த செய்தி குறிப்பில், மாவட்டத்தில் உள்ள பார்வைத்திறன், காது குறைபாடு, உடல் இயக்க குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட உள்ளது. இதை பெற, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரிலும், இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News November 17, 2025

பிரதமர் மோடி வருகை; கோவையில் இதற்கு தடை!

image

பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 19ம் தேதி கோவை வரவையொட்டி, விமான நிலையத்தில் வாகன நிறுத்தத்துக்கு தற்காலிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நவம்பர் 18 காலை 6 மணி முதல் 19 மாலை 6 மணி வரை டெர்மினல் முன் மற்றும் Y-ஜங்ஷனில் வாகன நிறுத்தம் தடை செய்யப்பட்டுள்ளது. பிக்கப், டிராப் மட்டும் அனுமதிக்கப்படுகிறது. பிரதமர் வருகையை முன்னிட்டு கோவை முழுவதும் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

News November 17, 2025

கோவை பெண்கள் பாதுகாப்புக்கு 7 பிங்க் ரோந்து வாகனங்கள்!

image

புலியகுளம் மகளிர் கல்லூரியில் கோவையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 7 பிங்க் ரோந்து வாகனங்கள் காவல் ஆணையர் சரவண சுந்தர் தொடங்கி வைத்தார். சிங்காநல்லூர், காட்டூர், சாய்பாபா காலனி உள்ளிட்ட பகுதிகளில் இவை 24 மணி நேர ரோந்தில் ஈடுபடும். மேலும் 4 இடங்களில் சகோ தூண்கள் நிறுவப்பட்டு, எஸ்.ஓ.எஸ் மூலம் உடனடி போலீஸ் உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 17, 2025

கோவை ஆசிரியர் தகுதி தேர்வில் 1526 பேர் ஆப்சென்ட்!

image

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு(TET)நேற்று, இன்று என இரு தினங்கள் நடைபெற்றது. அதன்படி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் – 2 தேர்விற்கு 12,370 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 10,844 பேர் மட்டுமே தேர்வில் கலந்து கொண்டனர். மீதமுள்ள 1526 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.

error: Content is protected !!