News January 3, 2025
இலவச பயிற்சி வகுப்புகள்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் :தேர்வாணையத்தால் வெளியிடப்பட உள்ள TNPSC GROUP-IV தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் ஜன.8ஆம் தேதி முதல் (காலை 10 – மதியம் 1 மணி) நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடைய விரும்பும் மாணவர்கள் வரும் ஜன.7ஆம் தேதிக்குள் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி முன்பதிவு செய்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News October 18, 2025
விழுப்புரம்: மது பாட்டில் கடத்தியவர் கைது

விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ரங்கநாதபுரம் பகுதியில் புதுச்சேரி மாநில மதுப்பாட்டில்களை கடத்தி வந்த விழுக்கம் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 103 புதுச்சேரி மதுபானப் பாட்டில்கள் மற்றும் ஒரு இரண்டு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
News October 17, 2025
விழுப்புரம் மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில், உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியைக் கொண்டாட பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளன.
News October 17, 2025
விழுப்புரம்: 2,708 உதவிப் பேராசிரியர் வேலை.. APPLY NOW

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சம்பளமாக ரூ.57,700 – ரூ.1,82,400 வழங்கப்படும். மேலும் விண்ணப்பிக்க மற்றும் கல்வி தகுதிகள் குறித்து அறிய இந்த<