News December 31, 2024
இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு தாட்கோ மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC Group-II & IIA தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது. விருப்பமுள்ள நபர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தின் வாயிலாக பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று (டிச.31) தெரிவித்துள்ளார்.
Similar News
News December 2, 2025
சிவகங்கை: ஒரே நாளில் 700 பேர் மீது வழக்கு

சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கையில் மொத்தம் ஒரே நாளில் 700 பேர் மீது போக்குவரத்து விதிமுறை மீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இத்தகைய திடீர் வாகன சோதனைகள் தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் நடத்தப்படும் என்றும், பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
News December 2, 2025
சிவகங்கை விபத்து: உயிரிழந்தோர் புகைப்படம் வெளியீடு!

1.சென்றாயன் (36) – அரசு பஸ் டிரைவர், வத்தலகுண்டு, 2.முத்துமாரி (60) – சிங்கம்புணரி, 3.கல்பனா (36) – காரைக்குடி, 4.மல்லிகா (61) – அரியக்குடி, 5.குணலட்சுமி (55) – தேவகோட்டை, 6.செல்லம் (55) – மேலூர், 7.தெய்வானை (58) அம்மன்குறிச்சி, புதுக்கோட்டை, 8.முத்துலட்சுமி (49) மேலூர், 9.வெற்றிச்செல்வி (60) – திண்டுக்கல், 10.லாவண்யா (50) – திருவல்லிக்கேணி, சென்னை 11. டயானா (17) – கல்லூரி மாணவி, துவரங்குறிச்சி.
News December 1, 2025
சிவகங்கை பேருந்து விபத்து; பிரதமர் மோடி நிவாரணம்

பிரதமர் நரேந்திர மோடி இன்று 1.12.25 வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று 30.11.25 சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு மத்திய அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


