News August 4, 2024
இலவச தையல் பயிற்சி

திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் திறன்மிகு தொழிலாளர்களை பணி அமர்த்தும் வகையில் ஆடை உற்பத்தி சார்ந்த பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது. இதன்தொடர்ச்சியாக வரும் 18ம் தேதி முதல் இலவச தையல் பயிற்சிகளும், 2ம் கட்ட பேட்டர்ன் மேக்கிங் பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. மேலும், கூடுதல் விவரங்களுக்கு 95979-14182 என்ற எண்ணை தொர்பு கொள்ளலாம்.
Similar News
News December 13, 2025
திருப்பூர் அருகே விபத்து: ஒருவர் பலி!

ஊத்துக்குளி ரயில் நிலைய பகுதியைச் சேர்ந்த சாமியப்பன் என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் கொடியம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் ஒருவர் சாமியப்பனின் வாகனம் மீது மோதியுள்ளார். இதில் தடுமாறி கீழே விழுந்த சாமியப்பன், படுகாயம் அடைந்த நிலையில், கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் அவர் உயிரிழந்தார்.
News December 13, 2025
திருப்பூரில் இலவச தையல் பயிற்சி!

திருப்பூரில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச தையல் பயிற்சி (Self Employed Tailor) (with Hand Embroidery) விரைவில் வழங்கப்படவுள்ளது. 50 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், தையல் மற்றும் எம்ராய்டரி தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதற்கு 8வது படித்திருந்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை<
News December 13, 2025
திருப்பூர்: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <


