News April 18, 2025

இலவச கோடைக்கால பயிற்சி முகாம் அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கோடை கால பயிற்சி முகாம் வரும் 25.04.2025 முதல் 15.05.2025 வரை நடைபெற உள்ளது. தடகளம், கபடி, கூடைப்பந்து, கால்பந்து மற்றும் கை பந்து என 5 விளையாட்டிற்கான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 7401703463 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க

Similar News

News November 11, 2025

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஆய்வுக் கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்டம்(நவ.11)மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திருமதி சிவசௌந்தரவல்லி அவர்கள் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்களுக்கு ஆய்வுக் கூட்டம் என்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் அரசுத் துறை அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.

News November 11, 2025

ஓடும் ரெயிலில் தவறி விழுந்து வாலிபர் பலி

image

வாணியம்பாடி அடுத்த வளத்தூர் ரெயில் நிலையம் யார்டில் இன்று (நவ.11) சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிப்பட்டு தலை துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தார். ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

News November 11, 2025

ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது

image

வாணியம்பாடி,மாதகடப்பா மலைச் சாலையில் இன்று ( நவ.11) உணவு பாதுகாப்புத்துறை உதவி ஆய்வாளர் அன்சாரி தலைமையில் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆம்பூரில் இருந்து ஆந்திரா மாநிலத்தை நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்ட போது அதில் சுமார் 1 டன் ரேஷன் அரிசி இருப்பதை கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து அரிசி கடத்தலில் ஈடுபட்ட மதனாஞ்சேரியை சேர்ந்த ராஜலிங்கம் என்பவரை கைது செய்தனர்.

error: Content is protected !!