News April 18, 2025
இலவச கல்வி; விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், மாணவர்களுக்கு எல்கேஜி முதல் 8ஆம் வகுப்பு வரை இலவச கல்வி அளிக்கப்படும். தேவையான ஆவணங்கள்: வருமானச் சான்றிதழ், இருப்பிடம் சான்றிதழ், சாதிச் சான்றிதழ். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. rte.tnschools.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
Similar News
News December 22, 2025
விழுப்புரம்: SBI வங்கியில் வேலை.. நாளையே கடைசி!

விழுப்புரம் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் நாளை டிச.23ம் தேதிக்குள், இந்த <
News December 22, 2025
விழுப்புரம்: பல்லவர்கள் கட்டிய முதல் கோயில் எது தெரியுமா?

விழுப்புரம் மாவட்டம் மண்டகப்பட்டு எனும் ஊரில் உள்ளது திருமூர்த்தி கோயில். பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனால் கட்டப்பட்ட இந்த கோயிலே பல்லவர்களின் முதல் குடைவரை கோயிலாக உள்ளது. கோயில் கட்டுமானத்தில் மலையை குடைந்து குடைவரை கோயில் அமைக்கும் முறையில் பெயர் போனவர்கள் பல்லவர்கள். அவர்கள் கட்டிய முதல் கோயில் என்பது இதன் சிறப்பு. விழுப்புரம் மாவட்ட பெருமையை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
News December 22, 2025
விழுப்புரம்: வாக்காளர்களே சூப்பர் UPDATE!

விழுப்புரம் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!


