News October 24, 2024

இலவச அரிசிக்கான பணம் நாளை வங்கியில் வரவு வைப்பு

image

புதுச்சேரி அரசு, குடிமைப்பொருள் வழங்கல் துறை சார்பில் இலவச அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய இரண்டு மாதங்களுக்கு சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ரூ.1,200, மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ரூ.600 அவர்களது வங்கிக் கணக்கில் நாளை வரவு வைக்கப்பட உள்ளது என அதன் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 17, 2025

புதுச்சேரி: பாஸ்போர்ட் விசாரிப்பு போலீசார் இடமாற்றம்

image

புதுச்சேரி மாநிலத்தில் காவல்துறையில் பாஸ்போர்ட் விசாரிப்பு பிரிவில் பணிபுரியும் நான்கு போலீசார் காரைக்கால் மாவட்டத்திற்கு இன்று இடமாற்றம். மேலும் போலிசார் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களிடம் விசாரணையின் போது லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் டி.ஜி.பி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News September 16, 2025

மத்திய அமைச்சருடன் புதுச்சேரி முதல்வர் சந்திப்பு

image

புதுவைக்கு வருகை தந்துள்ள மத்திய தொழிலாளர் நலம் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியாவை, இன்று காலாப்பட்டு அருகே உள்ள தனியார் ஹோட்டலில், முதலமைச்சர் ரங்கசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது புதுவை சபாநாயகர் செல்வம் உடனிருந்தார். அப்போது 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினர்.

News September 16, 2025

புதுச்சேரி விமான நிலையத்தில் பயணியர் சேவை தினம்

image

புதுச்சேரி விமான நிலையத்தில், பயணியர் சேவை தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. நாளைய தினம் விமான நிலையத்தில், இலவச மருத்துவ பரிசோதனை முகாம், இரத்த தான முகாம், மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து விளக்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனால் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றனர்.

error: Content is protected !!