News March 19, 2025

இலங்கை போலீசார் வழக்கு ஒத்திவைப்பு

image

இலங்கை கொழும்பு புறநகர் பகுதியில் 26.08.2020 அன்று இலங்கை போலீசார் 23 கிலோ ஹெராயின் போதைப்பொருளை கைப்பற்றிய வழக்கில் இலங்கை துறைமுக காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றிய பிரதீப்குமார் பண்டாரா தமிழகத்திற்கு அகதியாக தப்பி வந்த நிலையில் கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமீனில் திருச்சி முகாமில் இருக்கும் நிலையில் நேற்று நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் விசாரணையை ஏப்.5 க்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

Similar News

News March 19, 2025

ராமநாதபுரம் காவல்துறை ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(மார்ச். 19) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது X வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News March 19, 2025

சிறுமி பாலியல் தொல்லை வழக்கில் 60 ஆண்டுகள் சிறை

image

ராமநாதபுரம் பிரப்பன்வலசை பகுதியைச் சேர்ந்த 8 ஆம் வகுப்பு சிறுமியை 2019 ஆம் ஆண்டில் சிறுமியின் மாமா மகனான அருள்நேசன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து சிறுமி கர்பமடைந்த நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இது தொடர்பாக ராமேஸ்வரம் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து அருள்நேசனை கைது செய்த நிலையில் அவருக்கு 60 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராமநாதபுரம் விரைவு மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News March 19, 2025

அக்னி வீர் திட்டத்தில் ஆட்சேர்ப்பு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2025-2026 ஆம் ஆண்டு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10, 12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், டிரேட்ஸ்மென் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இதில் சேர விருப்பமுள்ள இளைஞர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் ஏப்.10 வரை பதிவு செய்யலாம் என திருச்சி ராணுவ ஆட்சேர்ப்பு இயக்குநரகம் தெரிவித்துள்ளது. SHARE IT

error: Content is protected !!