News September 14, 2024

இலங்கையில் இருந்து தமிழகம் வந்த 19 மீனவர்கள்

image

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம் மற்றும் நாகை மாவட்டங்களைச் சேர்ந்த 19 மீனவர்கள், நேற்றிரவு இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர். நாகை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 19 மீனவர்கள், கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி விசைப்படகுகளில், கடலில் மீன் பிடித்த போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News September 17, 2025

செங்கை: மகளிர் உரிமைத்தொகை: இந்த 5 ஆவணங்கள் போதும்!

image

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. <>இந்த<<>> லிங்கில் கிளிக் செய்து செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். ஷேர்

News September 17, 2025

கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் 17ம் தேதி தாம்பரம் வருவாய் கோட்டத்தில் காலை 10:30 மணிக்கு மதுராந்தகம் வருவாய் கோட்டத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு சம்பந்தப்பட்ட கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தலைமையிலும், செங்கல்பட்டு சார் ஆட்சியர் அலுவலகத்தில் செங்கல்பட்டு சார் ஆட்சியர் தலைமையில் 18ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது என்ன மாவட்ட ஆட்சியர் சினேகா தெரிவித்துள்ளார்.

News September 16, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (செப்-16) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!