News August 18, 2024
இலங்கைக்கு கஞ்சா கடத்திய 8 பேர் கைது

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் துறைமுகத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி கொண்டு செல்ல இருந்த 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 12 கிலோ கஞ்சா, 8 செல்போன்கள் மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Similar News
News November 28, 2025
JUST IN: ராம்நாடு பள்ளிகளுக்கு விடுமுறையா.? விளக்கம்

தமிழகத்தில் நாளை (நவ.29) சனிக்கிழமையன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டதாக பரவிய தகவல் தவறானது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. பள்ளிகள் விடுமுறை குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவர் என்றும், தற்போது பரவிய தகவல் உண்மையில்லை என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 28, 2025
ராம்நாடு: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

டிட்வா புயல் காரணமாக மாணவர்களின் நலன்கருதி இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (நவ.29) விடுமுறை அறிவித்து தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
News November 28, 2025
BREAKING: தனுஷ்கோடியில் இருந்து மக்கள் வெளியேற்றம்!

டிட்வா புயல் காரணமாக சூறைக்காற்று பலமாக வீசி வருகிறது. தங்கச்சி மடம் அருகே குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. பொது மக்களின் நலன்கருதி தனுஷ்கோடியில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றம். டிட்வா புயல் காரணமாக தனுஷ்கோடிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


