News October 25, 2024
இறந்தவர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம்

எதிர்பாராத விதமாக விபத்தில் இறந்த புதுச்சேரி அரியாங்குப்பம் சண்முகா நகரை சேர்ந்த வீரமணிகண்டன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியை சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி நேற்று வழங்கினார். நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சரவணன்குமார், அரியாங்குப்பம் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கரன் என்கின்ற தட்சணாமூர்த்தி, உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Similar News
News November 28, 2025
புதுச்சேரி: குடிநீர் தடை அறிவிப்பு!

புதுச்சேரி, பொதுசுகாதார செயற்பொறியாளர் வெளியிட்ட செய்தியில், தனகோடி நகர் மற்றும் தர்மாபுரி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் நாளை 29ம் தேதியும், குருமாம்பேட் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில், வரும் 1ம் தேதியும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் நாளை தனகோடி நகர், தர்மாபரி, லெனின் வீதி, சபரி நகர், பகுதிகளிலும், வரும் 1ம் தேதி குருமாம்பேட் பகுதியிலும் குடிநீர் தடைபடும் தெரிவித்தாரர்.
News November 28, 2025
புதுச்சேரி: சூறாவளிக்காற்று எச்சரிக்கை

புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குநர் முகமது இஸ்மாயில் வெளியிட்டுள்ள செய்தியில், குமரிக்கடல் பகுதிகளில் இன்று 28ம் தேதி முதல் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவித்தனர்.
News November 28, 2025
புதுச்சேரி: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

புதுச்சேரி, ஆட்சியர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த நவம்பர் 4ம் தேதி முதல் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பு படிவங்களை வினியோகம் செய்தனர். வாக்காளர்களின் படிவங்கள் சேகரிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த அட்டவணையின்படி வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் (டிச.4) ஆகும் என தெரிவித்தார்.


