News March 21, 2025

இறந்தவர்களின் உடலை தண்ணீரில் தூக்கிச் செல்லும் அவலம்

image

பரமக்குடி அருகே போகலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மணிச்சியேந்தல் கிராமத்தில் மயானத்திற்கு செல்வதற்கு ஊரின் நடுவே அமைந்துள்ள கால்வாயை கடந்து செல்ல வேண்டும். இந்நிலையில் கால்வாயில் தண்ணீர் செல்வதால் கிராம மக்கள் இறந்தவரின் உடல்களை தண்ணீர்குள் இறங்கி தூக்கிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது. முறையாக பாலம் அமைத்து தர கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News

News April 1, 2025

ஆயுள் தண்டனையை உறுதி செய்த ஐகோர்ட்

image

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரை சேர்ந்த லெட்சுமியை 27.4.2014 அன்று முன்விரோதம் காரணமாக பக்கத்து வீட்டை சேர்ந்த மருதுபாண்டி மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் சரமாரியாக தாக்கியதில் உயிரிழந்தார். 20201 இல் மருதுபாண்டிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தண்டனையை ரத்து செய்ய ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் ஆயுள் தண்டனையை உறுதி செய்து, நீதிபதிகள் மனுவை தள்ளூபடி செய்தனர்.

News March 31, 2025

ராமநாதபுரம்: ரூ.80 லட்சம் மதிப்பிலான கடல்அட்டைகள் பறிமுதல்

image

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே தென் கடலில் இந்திய கடலோரக் காவல் படையினர் நேற்று ரோந்து சென்றனர். அப்போது கடற்கரையில் தலா 40 கிலோ வீதம் 5 கேன்களில் பதுக்கி வைத்திருந்த 200 கிலோ கடல் அட்டைகளை கைப்பற்றினர். கைப்பற்றிய கடல் அட்டைகளை மண்டபம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு ரூ. 80 லட்சம் என இந்திய கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.

News March 31, 2025

இராமநாதபுரம் சரக டிஐஜி பதவியேற்பு

image

இராமநாதபுரம் சரக டிஐஜியாக பணியாற்றி வந்த அபினவ் குமார் ஐபிஎஸ் மதுரை சரக டிஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து திருநெல்வேலி சரக டிஐஜியாக பணியாற்றி வந்த  மூர்த்தி ஐபிஎஸ் இராமநாதபுரம் சரக டிஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று (மார்ச்.31) இராமநாதபுரத்தில் புதிய டிஐஜியாக பதவியேற்று கொண்டார்.

error: Content is protected !!