News April 28, 2024

இறகு பந்து விளையாடிய இளைஞர் மரணம்

image

பெண்ணாடம் சோழன் நகரை சேர்ந்தவர்  பண்பரசு (22). இவர் நேற்று தனது நண்பர்களுடன் இறகு பந்து விளையாடியபோது, அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்த அவரது நண்பர்கள், பண்பரசை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Similar News

News April 21, 2025

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை: இன்றே கடைசி நாள்

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடலூர் மாவட்டத்தில் 41 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் <>இங்கு க்ளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே (ஏப்.21) கடைசி நாளாகும். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க..

News April 21, 2025

பண்ருட்டி அருகே கல்லூரி மாணவர் லாரி மோதி பலி

image

பண்ருட்டி அருகே உள்ள திருத்துறையூர் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் (16) புதுச்சேரியில் உள்ள கல்லூரி ஒன்றில் டிப்ளமோ படித்து வருகிறார். நேற்று சொந்த வேலை காரணமாக திருத்துறையூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஊராட்சி அலுவலகம் அருகே எதிரே வந்த லாரி மோதியதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News April 20, 2025

கடலூர்: 10th பாஸ் போதும்.. மாதம் ரூ.15,000 சம்பளத்தில் வேலை

image

கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுநர் ( Driver Cum Delivery) பணியிடங்களுக்கான அறிவிப்பு தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. குறைந்தது 10-ஆம் வகுப்பு கல்வித் தகுதி கொண்ட நபர்கள் tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.15,000 வழங்கப்படும். உங்க நண்பருக்கு இதை SHARE செய்யவும்!

error: Content is protected !!