News March 26, 2025
இரு லாரிகள் நேருக்கு நேர் மோதல்: ஒருவர் பலி

விருத்தாசலத்தில் இருந்து நேற்று (மார்.25) அதிகாலை லாரி ஒன்று வந்தவாசி நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டு இருந்தது. லாரியை விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த கொளஞ்சி (55) என்பவர் ஓட்டிச் சென்றார். அப்போது, பெருநகர் பூமாசெட்டிகுளம் அருகே லாரி சென்றபோது, எதிரே வந்த மற்றொரு லாரி மீது மோதியது. இதில், எதிரே வந்த லாரி ஓட்டுநர் கார்த்திகேயன் (45) சம்பவ இடத்திலேயே பரிதமாக உயிரிழந்தார்.
Similar News
News November 12, 2025
நவ.19ம் தேதி மாற்றுத்திறனாளி குறைதீர்க்கும் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட, மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மாவட்ட ஆட்சியரின் தலைமையில் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து வரும் நவ.19 புதன்கிழமை அன்று மாலை 4 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் சிறப்பு கூட்டம் நடைபெறுகின்றது.
News November 12, 2025
போட்டி தேர்வுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இன்று நவ.12 முதல் தொடங்கி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள போட்டி தேர்வர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
News November 12, 2025
காஞ்சிபுரம்:தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள்,<


