News April 13, 2025

இரு பைக்குகள் மோதி விபத்து – வாலிபர் உயிரிழப்பு

image

வேடல் கிராமம் பெரியார் நகரில் அரக்கோணம் – சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் நேற்று இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் இரு வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இறந்தவர் யார் என அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News January 2, 2026

ராணிப்பேட்டை: +2 போதும், ரயில்வேயில் வேலை!

image

இந்திய ரயில்வேயில் Senior Publicity Inspector, லேப் அசிஸ்டன்ட், Law Assistant, translator உள்ளிட்ட 15 பதவிகளுக்கு மொத்தம் 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் லேப் அசிஸ்டன்ட் பணிக்கு 12ஆம் வகுப்பும், மற்ற பிரிவுகளுக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் டிகிரியும் முடித்திருக்க வேண்டும். சம்பளம்: Rs.44,900. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி-29. <>இந்த லிங்க்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News January 2, 2026

ராணிப்பேட்டையில் மின்தடை-உங்க பகுதி இருக்கா?

image

அரக்கோணம், சோளிங்கர், வாலாஜா துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக சோளிங்கர், மேல் வெங்கடாபுரம், பாணாவரம், கரிமேடு, தர்மநீதி, வேகாமங்கலம், வாலாஜா, ஒழுகூர், அரக்கோணம் நகரம், காவனூர், ஆனைப்பாக்கம், நாகவேடு, புளியமங்கலம் மற்றும் இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News January 2, 2026

ராணிப்பேட்டை: நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார்!

image

சிறுகரும்பூர் பேருந்து நிறுத்தம் அருகில் நேற்று (ஜன.1) சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் கார் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதிலிருந்த படுகாயமடைந்த மற்றொரு நபர் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!