News April 24, 2025
இரு தரப்பினர் இடையே மோதல் -ஒருவர் கொலை

திருச்சி தேவதானம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று மாலை இருதரப்பினர் இடையே முன்விரோதம் காரணமாக, தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த தாக்குதலில் 2 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இந்த தாக்குதலில் தாராநல்லூரைச் சேர்ந்த கருக்குவேல் என்பவர் உயிரிழந்துள்ளார் . இதுகுறித்து திருச்சி கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 11, 2026
ஶ்ரீரங்கம்: மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

திருச்சி, ஸ்ரீரங்கம் மேலூரில் உள்ள காடை பிள்ளை அய்யனார் கோவில் திருவிழாவின்போது, கோவில் தேர் பட்டியலின மக்கள் வாழும் தெருக்களுக்கு வருவதில்லை, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, திருச்சியை சேர்ந்த சத்யராஜ் என்பவர் ஹைகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக திருச்சி ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
News February 11, 2026
திருச்சி மாவட்ட அரசு துறையில் வேலை!

தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், திருச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள, 6 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://tiruchirappalli.nic.in என்ற தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்கு நேரடியாகவோ அல்லது தபால் வழியாகவோ வரும் 16-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 11, 2026
திருச்சி: மாவட்ட அளவிலான குத்து சண்டை போட்டி அறிவிப்பு

திருச்சி மாவட்ட குத்துச்சண்டை கழகம் சார்பில், மாவட்ட அளவிலான ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டிகள், வரும் 14ஆம் தேதி, அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. சப் ஜூனியர், ஜூனியர், யூத் ஆகிய பிரிவுகளுக்கான போட்டியில் பள்ளி மாணவர்கள், குறிப்பிட்ட வயது பிரிவில் உள்ள விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளலாம் என குத்து சண்டை கழகத்தின் செயலாளர் நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


