News March 29, 2024
இரும்பாளியில் வைக்கோல் போர் தீயில் நாசமானது

இரும்பாளியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி, இவருக்கு சொந்தமான வைக்கோல் போரில் நேற்று மார்ச் 28-ந்தேதி மாலை திடிரென தீ பிடித்தது. பின்னர் மலமலவென பிடித்த தீயினால் வைக்கோல் போர் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினா் போராடி தீயை அணைத்தனர்
Similar News
News December 4, 2025
புதுகை: சட்ட விரோத மது விற்பனை செய்தவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அடுத்த இளஞ்சாகுடி பேருந்து நிறுத்தம் அருகே நேற்று ஐயப்பன் (49) என்பவர் சட்டவிரோத மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆவுடையார்கோவில் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 26 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.
News December 4, 2025
புதுகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

அரிமளம் கே புதுப்பட்டி கழனிவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 06.12.2025, காலை 9 மணிக்கு நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து மருத்துவ சேவைகளும் பரிசோதனை இலவசமாக செய்யப்படும். இதில் சிறுநீரக பாதுகாக்கும் சீர்மிகு திட்டம் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் போன்ற பல்வேறு சுகாதார திட்டங்கள் மூலம் இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்
News December 4, 2025
புதுகை: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

புதுகை மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் <


