News January 22, 2025
இருதரப்பு மோதல் 6 பேர் கைது

ஸ்ரீரங்கம் அருகே காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி, அன்று நள்ளிரவு அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் நடமாடினர். அப்போது, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. சிலர் காயமடைந்தனர். கதிரவன் (19) அளித்த புகாரின் பேரில் தமிழரசன், பிரசன்னா, கமலகண்ணன், கார்த்திக் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
Similar News
News November 30, 2025
திருச்சி மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு

திருச்சி மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், லால்குடி பகுதி கல்லக்குடி 43.4 மில்லி மீட்டர், லால்குடி 38.4 மில்லி மீட்டர், புள்ளம்பாடி 61.6 மில்லி மீட்டர், தேவி மங்கலம் 27.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும், சமயபுரம் 44 மில்லி மீட்டர், சிறுகுடி 30 மில்லி மீட்டர், நாவலூர் கொட்டுப்பட்டு 16.5 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.
News November 30, 2025
திருச்சி: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <
News November 30, 2025
திருச்சி: ஆதாரில் திருத்தம் செய்வது இனி ரொம்ப ஈஸி.!

திருச்சி மக்களே, ஆதார் அட்டையில் உங்களது பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <


