News March 18, 2025
இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் பலி

கமுதி அருகே செங்கப்படையை சேர்ந்த சிவனேசன்(75) தனது இருசக்கர வாகனத்தில் கமுதிக்கு சென்றுள்ளார். அப்போது பாம்புல்நாயக்கன்பட்டி அருகே சென்ற போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து கமுதி போலீசார் விசாரிக்கின்றனர். இனிமேல் தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பாக பயணம் செய்வோம். விலைமதிப்பில்லாத உயிரைக் காப்போம்.
Similar News
News March 19, 2025
நம்ம ஊரு திருவிழாவிற்கு கலைக்குழு தேர்வு

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பில் சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவில் பங்கேற்க விரும்பும் கலைக்குழுக்களின் பதிவு நிகழ்ச்சி ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் மார்ச் 22, 23 காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் ஒவ்வொரு கலைக்குழுவின் 5 நிமிட வீடியோ பதிவு செய்யப்பட்டு தேர்வுக் குழுவால் கலைக்குழுக்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
News March 19, 2025
இலங்கை போலீசார் வழக்கு ஒத்திவைப்பு

இலங்கை கொழும்பு புறநகர் பகுதியில் 26.08.2020 அன்று இலங்கை போலீசார் 23 கிலோ ஹெராயின் போதைப்பொருளை கைப்பற்றிய வழக்கில் இலங்கை துறைமுக காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றிய பிரதீப்குமார் பண்டாரா தமிழகத்திற்கு அகதியாக தப்பி வந்த நிலையில் கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமீனில் திருச்சி முகாமில் இருக்கும் நிலையில் நேற்று நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் விசாரணையை ஏப்.5 க்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
News March 19, 2025
பக்தரின் இறப்பிற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஸ்படிக லிங்க தரிசனத்திற்காக இன்று அதிகாலை வரிசையில் நின்ற ராஜஸ்தானைச் சேர்ந்த துறவி ராஜ்தாஸ் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். அவரது இறப்புக்கு நீதி கேட்டு, இந்து முன்னணி சார்பில், ராமேஸ்வரம் என் எஸ் கே வீதியில் (மார்ச்.20) காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்து முன்னணி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.