News January 2, 2025
இருசக்கர வாகன போக்குவரத்து தொடங்கியது

ராணிப்பேட்டை மாவட்டம் சிறுணமல்லி அருகே கல்லாற்றின் தரைப்பாலம் ஃபெஞ்சல் புயல் காரணமாக 75 அடி தூரத்திற்கு முற்றிலுமாக இடிந்து விழுந்து சேதம் அடைந்தது. இதனால் ஒரு மாதமாக அந்த வழியாக இரு சக்கர வாகனங்கள் மற்றும் நடந்து செல்ல கூட முடியாத அளவிற்கு அரக்கோணம் நெமிலி சாலை முழுவதுமாக துண்டிக்கப்பட்டது. தற்காலிகமாக சாலையை சீரமைக்கப்பட்டதால் இன்று முதல் இரு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 11, 2025
இரவு ரோந்து பணி செல்லும் போலீசார் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஜூலை 10) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை பாணாவரம், தக்கோலம், திமிரி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம்.
News July 10, 2025

மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

ராணிப்பேட்டையில் வருகின்ற ஜூலை 19 சனி காலை 8:30 முதல் மாலை 3 மணி வரை தென்கடப்பந்தாங்கலில் உள்ள, ராணிப்பேட்டை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 200-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் சுமார் 10,000 தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். மேலும் விபரங்களுக்கு இந்த (9488466468, 9952493516) எண்களில் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க