News April 18, 2025
“இராம்நாட்” விமானம் பற்றி தெரியுமா?

ராஜ ராஜேஸ்வர சேதுபதி (எ) மூன்றாம் முத்துராமலிங்க சேதுபதியின் ஆட்சியின்போது இரண்டாம் உலகப்போர் நடைபெற்று வந்தது. அந்த சமயத்தில் அவர் ராமநாதபுரம் சீமை இளைஞர்களை ராணுவத்தில் சேருமாறு அறிவுறுத்தியதோடு பல லட்சம் ரூபாய் மதிப்பில் அரசுக்கு “இராம்நாட்” என்ற பெயரில் ஒரு விமானத்தை கொடையாக கொடுத்துள்ளார்.மேலும் இராஜ ராஜேஸ்வர சேதுபதி,போர்க்கால நிதியுதவிக்காக பல லட்சங்களை வழங்கியது வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.
Similar News
News October 26, 2025
தாய்லாந்து அழகி போட்டிக்கு ராம்நாடு பெண் தேர்வு

முதுகுளுத்தூர் பகுதியை சேர்ந்த கஜேந்திரன் என்பவர் மகள் ஜோதிமலர் (28) பெங்களூரில் படித்து வருகிறார். மேலும், மாடலிங் செய்து வரும் அவர், வருகின்ற நவ – 28-ம் தேதி தாய்லாந்தில் ஹெரிடேஜ் அழகி போட்டிக்கு இந்திய நாடு சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில் இதில் பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைவதாகவும், இந்திய கலாச்சார விரிவுரைக்கு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது என்றார்.
News October 26, 2025
ராம்நாடு: இனிமேல் சிலிண்டர் இப்படி புக் பன்னுங்க!

உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARe பண்ணுங்க.
News October 26, 2025
பெண் குழந்தைகளுக்கு மாநில அரசின் விருது

2025–2026 ஆம் ஆண்டு தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24ல் பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக பங்காற்றும் 13 முதல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மாநில அரசின் விருது வழங்கப்படவுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தகுதியான பெண் குழந்தைகளிடமிருந்து. கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார்.


