News February 15, 2025

இராமேஸ்வரம் ஜங்ஷனுக்கு மன்னர் சேதுபதி பெயர்?

image

இந்திய இரயில்வே துறையின் தெற்கு இரயில்வே பொது மேலாளர் RN.சிங் GM-யை சந்தித்து நினைவு பரிசு வழங்கி இராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் இரயில் நிலையத்திற்கு இராமநாதபுரம் மன்னர் சேதுபதியின் பெயரை சூட்டவும், புதிய பாம்பன் பாலத்திற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் Dr. APJ அப்துல் கலாம் பெயரை சூட்டவும் பாம்பனை சேர்ந்த சமூக ஆர்வலர் சிக்கந்தர் கோரிக்கை வைத்தார்.

Similar News

News July 11, 2025

இராமநாதபுரத்தில் வேலைவாய்ப்பு முகாம்

image

இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (ஜூலை11) காலை 10 மணி – பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் (D பிளாக்) நடைபெறும் இம்முகாமில் 20 முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. 10 முதல் ITI, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் பங்குபெறலாம். வேலைதேடும் நண்பர்களுக்கு உடனே SHARE செய்யுங்கள்.

News July 10, 2025

ராமநாதபுரம்: இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரம்

image

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை, சார்பில் இன்று (ஜூலை-10) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கமுதி, பரமக்குடி, ராமேஸ்வரம், முதுகுளத்தூர் உட்கோட்டத்தில் ரோந்துப் பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளனர். இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்கு, பொதுமக்கள் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் மூலம் காவல்துறையை தொடர்புகொண்டு உதவி பெறலாம்.

News July 10, 2025

ராமநாதபுரத்தில் நேற்று 574 பேர் கைது

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று (ஜூலை 9) நடைபெற்ற அகில இந்திய வேலைநிறுத்தத்தையொட்டி 7 இடங்களில் நடைபெற்ற மறியலில் 185 பெண்கள் உட்பட 574 பேர் கைது செய்யப்பட்டனர். 3 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியு இந்த போராட்டங்கள் நடத்தப்பட்டன. ராமநாதபுரம், பரமக்குடி, சிக்கல், திருவாடானை, சாயல்குடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.

error: Content is protected !!