News February 15, 2025

இராமேஸ்வரம் ஜங்ஷனுக்கு மன்னர் சேதுபதி பெயர்?

image

இந்திய இரயில்வே துறையின் தெற்கு இரயில்வே பொது மேலாளர் RN.சிங் GM-யை சந்தித்து நினைவு பரிசு வழங்கி இராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் இரயில் நிலையத்திற்கு இராமநாதபுரம் மன்னர் சேதுபதியின் பெயரை சூட்டவும், புதிய பாம்பன் பாலத்திற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் Dr. APJ அப்துல் கலாம் பெயரை சூட்டவும் பாம்பனை சேர்ந்த சமூக ஆர்வலர் சிக்கந்தர் கோரிக்கை வைத்தார்.

Similar News

News December 5, 2025

பரமக்குடி மாணவி சாதனை

image

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியை சேர்ந்த மாணவிகள் மாநில அளவில் பளு தூக்கும் போட்டியில் 123 கிலோ எடையை தூக்கி தேசிய அளவில் போட்டிக்கு தேர்வாகி முதல் இடம் பிடித்துள்ளார். இதில் சுபாந்தினி, தேஜா மற்றும் ஸ்ரீநிதி ஆகிய மாணவிகள் வெங்கல பதக்கம் வென்றுள்ளனர். இவர்களுக்கு பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் பாராட்டு வருகின்றனர்.

News December 5, 2025

ராமநாதபுரம்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

ராமநாதபுரம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 5, 2025

ராமநாதபுரம்: டிகிரி முடித்தவர்கள் கவனத்திற்கு

image

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 14967 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. விண்ணப்ப கடைசி தேதி டிச. 4க்குள் முடிவடைந்த நிலையில், தற்போது கடைசி தேதி டிச. 11 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 18 – 45 வயதுக்குட்பட்ட 10th, 12th, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000 – ரூ.2,09,200 வரை வழங்கப்படும். இந்த நல்ல வாய்ப்பை SHARE செய்யுங்க.

error: Content is protected !!