News November 23, 2024
இராமநாதபுரம் மாவட்ட மக்கள் கவனத்திற்கு

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(நவ 23) மற்றும் நாளை(நவ 24) அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் அட்டையில் திருத்தம், பெயர் சேர்த்தல் உள்ளிட்டவைகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கலாம். மேலும், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டமும் நடைபெறுகிறது. இராமநாதபுரம் மாவட்ட மக்கள் கலந்து கொண்டு பயன்பெறவும்.
Similar News
News November 15, 2025
இராமநாதபுரத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

இராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை அருகே குடும்பத்துடன் வசித்து வந்த சஞ்சய் பாபு என்ற இளைஞர் நேற்று (நவ. 14) இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதுகாவலராக பணிபுரிந்தவர். இறந்த இளைஞரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்படுள்ளது. இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News November 15, 2025
ராம்நாடு: மத்திய அரசு பள்ளியில் வேலை ரெடி.. APPLY NOW

ராமநாதபுரம் மக்களே, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th, 12th, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிபடையில் தேர்வு செய்யப்படும். மேலும் விவரம் அறிய & விண்ணப்பிக்க <
News November 15, 2025
ராமேஸ்வரத்திற்கு விரைவில் வந்தே பாரத் ரயில்…

ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை தென்னக ரயில்வே கூடுதல் பொது மேலாளர் விபின் குமார் ஆய்வு செய்தார் அப்போது செய்தியாளர்களை சந்தித்தபோது 75 சதவிகிதம் கட்டுமான பணிகள் முடிவு அடைந்து விட்டது என தெரிவித்தார். மேலும், ராமேஸ்வரத்திற்கு விரைவில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது என தென்னக ரயில்வே கூடுதல் பொது மேலாளர் விபின்குமார் கூறினார்.


