News March 20, 2025

இராமநாதபுரம் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு

image

இராமநாதபுரம் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் Medical Officer, Security, Radiographer. என மொத்தமாக 17 காலிபணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்ப வேண்டும். விண்ணபிக்க கடைசி நாள் 25-03-2025. 10th, B.Sc, Diploma, ITI, M.Sc, MBBS, MSW படித்த நபர்களுக்கு ரூ.8,500 முதல் ரூ.60,000 வரை சம்பளம் கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு <>லிங்கை <<>>செய்யவும் *ஷேர் பண்ணுங்க

Similar News

News March 28, 2025

மகள்களுக்கு சொத்தில் முன்னுரிமை அளிக்கும் ஊர்

image

ராமநாதபுரம், திருவாடனை அருகே உள்ள திருவெற்றியூரில் மகள்களுக்கு முன்னுரிமை அளித்து சொத்து எழுதி வைக்கும் பழக்கம் உள்ளது. இதற்கு காரணம் இங்குள்ள பாகம்பிரியாள் அம்மன் என்கின்றனர்.அப்பகுதி மக்கள். விஷ கடிக்கு ஆளானவனர்கள் இக்கோயிலில் உள்ள வாசுகி தீர்த்ததில் குளிப்பதன் மூலம் குணமடைவார்கள் என்பது இக்கோயிலின் நம்பிக்கை. இதனால் இந்த அம்மன் மருத்துவச்சி அம்மன் என்று அழைக்கப்படுகிறார். *ஷேர் பண்ணுங்க

News March 28, 2025

தாம்பரம் – ராமேஸ்வரத்திற்கு புதிய ரயில்

image

தாம்பரத்திலிருந்து ராமேஸ்வரத்திற்கு புதிய இரயில் இயக்க இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல்.6ம் தேதி முதல் புதிய ரயில் பயணத்தை துவக்க இருப்பதாக மாநில பாஜக தலைவர்  அண்ணாமலை தகவல் தெரிவித்துள்ளார். புதிய ரயில் தாம்பரத்திலிருந்து, சிதம்பரம் , திருவாரூர் வழியாக இராமேஸ்வரம் வந்தடைய நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. *ஷேர் பண்ணுங்க

News March 28, 2025

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று (மார்ச்.27) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

error: Content is protected !!