News February 27, 2025
இராமநாதபுரம் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, மதுரை ஆகிய 10 மாவட்டங்களுக்கு நாளையும் (பிப்.28), குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு நாளை மறுநாளும் (மார்ச்.1) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Similar News
News April 21, 2025
பக்ரைன் நாட்டில் உயிரிழந்த இராம்நாடு மீனவர்

பாம்பன் காமராஜர் நகரை சேர்ந்த சீமோசன்(33) என்பவர் மீன்பிடி தொழிலுக்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பக்ரைன் நாட்டிற்கு சென்ற நிலையில் நேற்று முன்தினம் கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார். அவருக்கு செல்சியா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். எனவே உயிரிழந்த மீனவர் உடலை சொந்த ஊர் கொண்டுவர அவரது மனைவி தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
News April 21, 2025
700 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல் மீண்டும் திறப்பு

பாம்பன் பகுதியில் அமைந்துள்ள 700 ஆண்டுகள் பழைமையான ஜாமி ஆ மஸ்ஜித் 33 ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பிக்கப்பட்டு மீண்டும் தற்போது திறக்கப்பட்டது. அங்கே நேற்று, இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வழிபட்டனர். மாலிக் கபூர் என்பவரே இந்த 700 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசலை (ஜாமி ஆ மஸ்ஜித்) கட்டியவர் ஆவார். இவர் அலாவுதீன் கில்ஜி மன்னரின் படைத்தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. *ஷேர் பண்ணுங்க
News April 20, 2025
ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா விவர பட்டியல்

பரமக்குடியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருகோவிலில் சித்திரை திருவிழா நிகழ்ச்சிகளின் விவரம் இன்று (20-04-25)
வெளியானது. வருகின்ற சித்திரை-15 (29-04-25)
காப்புகட்டுதல் தொடங்கி
13 நாட்கள் திருவிழா
வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது. (12-05-25) திங்கள்கிழமை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை திருக்கோவில் கதவுகள் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க