News April 26, 2025

இராமநாதபுரம் மாவட்டத்தில் சத்துணவு உதவியாளர் பணி

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 187 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு நியமனம் செய்யப்படவுள்ளது, பணியாளர்களுக்கு ஓராண்டு கால பணிக்கு பின் சிறப்பு காலமுறை ஊதியத்தில் (ஊதிய நிலை 1 (Level of Pay – ரூ.3000-9000)) ஊதியம் வழங்கப்படும். இதற்கு 21 – 40 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணபிக்கலாம். விண்ணபிக்க இன்றே கடைசி நாள் (ஏப்ரல்.26) <>லிங்க்<<>> *ஷேர் பண்ணுங்க

Similar News

News December 24, 2025

இராம்நாதபுரம்: எம்.பி-யின் சகோதரர் மரணம்

image

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய செயலாளர், தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனியின் சகோதரர் K.சிராஜுத்தீன் இன்று உடல் நலக் குறைவினால் மரணம் அடைந்தார். மறைந்த K.சிராஜுத்தீன் பிரபல S.T.கொரியர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனராக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News December 23, 2025

இராம்நாடு: தனியார் பேருந்தில் 31 பவுன் நகை கொள்ளை

image

திருவாடானை அருகே கீழக்குடியைச் சேர்ந்தவர் தொண்டியம்மாள்(50). இவர் தனது பேரன் பிறந்த நாள் விழாவுக்காக கோவை சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு தனியார் பேருந்தில் ஊருக்குப் புறப்பட்டார். நேற்று காலை பேருந்து திருவாடானைக்கு வந்தது. அப்போது தொண்டியம்மாள் தனது பையைப் பார்த்தபோது, அதிலிருந்த 31 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடியது தெரியவந்தது. திருவாடானை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News December 23, 2025

ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் அறிவிப்பு

image

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இன்று (டிச-23) ஒரு விசைப்படகு, 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இலங்கை கடற்படையில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை படகுகளையும் விடுதலை செய்ய கோரி டிச- 26ம் தேதி காலை 10.00 மணி அளவில் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

error: Content is protected !!