News April 16, 2025

இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு வேலை

image

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு குறைதீர்ப்பாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.45,000 வரை வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் tnrd.tn.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 ஆகும். அரசு வேலை தேடும் உங்க நண்பருக்கு இதை SHARE செய்யவும்.

Similar News

News September 17, 2025

ராமநதபுரம்: மின்சாரம் தாக்கி பெண் பலி

image

தங்கச்சிமடம் விக்டோரியா நகரை சேர்ந்த மீனவர் வினோ என்பவரின் மனைவி பிரதிஷ்டா (30). இவர் நேற்று (செப் 16) மாலை வீட்டில் குளிக்கச் சென்ற போது மின் மோட்டார் சுவிட்சை ஆன் செய்துள்ளார். அப்போது சுவிட்சில் இருந்து மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தங்கச்சிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா விசாரிக்கிறார். பிரதிஷ்டா தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

News September 17, 2025

சாயல்குடி, பெருநாழி பகுதிகளில் மின் தடை அறிவிப்பு

image

சாயல்குடி துணை மின் நிலையம், பெருநாழி துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (செப். 17) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடலாடி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் 33 கே.வி. மின் பாதையில் பாலிமர் இன்சுலேட்டர் மாற்றம் செய்யும் பணி நடைபெற உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

News September 17, 2025

இராமநாதபுரம் மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (செப்.16) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை, ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும்.

error: Content is protected !!