News August 14, 2024
இராமநாதபுரம் மாவட்டத்திற்கு 2 நாள் தண்ணீர் கட்

திருச்சி முத்தரசநல்லூர் தலைமை நீரேற்று நிலையத்தில் வரும் 20ஆம் தேதி மாதாந்திர மின் நிறுத்தம் மற்றும்பிரதான குழாய்களில் உள்ள கசிவுகள் சரி செய்ய இருப்பதால் இராமநாதபுரம் மாவட்டத்தில் 20 மற்றும் 21 ஆகிய 2 தினங்கள் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் இருக்காது என மாவட்டஆட்சித்தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் இன்று (ஆக.14) அறிவித்துள்ளார்.
Similar News
News January 9, 2026
ராமநாதபுரம்: 7330 பேர் விபத்தில் சிக்கினார்கள்

இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டு 108 அவசர ஊர்தி மூலம் 43,413 பேர் பயனடைந்துள்ளனர். அதன்படி விபத்தில் சிக்கியவர்கள் 7330, கர்ப்பிணிகள் 14643, இருதயம் பாதிப்பு 2656, சுவாச பிரச்னை 1836, வாதப் பிரச்னை 736, பச்சிளம் குழந்தைகள், தாய்மார்கள் 381 பேர் என மொத்தம் 43,413 பேர் பயன் அடைந்துள்ளதாக இராமநாதபுரம் மாவட்ட 108 சேவை மேலாளர் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
News January 9, 2026
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (ஜன.08) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
News January 8, 2026
இராமேஸ்வரம் கோயில் நடை அடைப்பு

இராமேஸ்வரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ராமநாதசுவாமி கோவிலில் ஜனவரி. 11 ஞாயிற்றுக்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திருக்கோவில் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை நடை அடைக்கப்படும் என திருக்கோவில் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். எனவே உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் நடை அடைப்பு நேரத்தில் வருகை புரிவதை தவிர்த்து கொள்ளும்படி அறிவித்துள்ளனர். *ஷேர்


