News April 13, 2025
இராமநாதபுரம்: திடீர் மின்தடையா? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே 94987 94987 என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.SHARE
Similar News
News November 17, 2025
குமரியில் மழைச் சேதத்தை தடுக்க தயார் நிலை – மேயர் பேட்டி

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது; நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் மழை சேதங்களை தடுக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேவையான ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். ஏற்கனவே கடந்து சில மாதங்களுக்கு முன்பே இருந்து கால்வாய் நிகழ்ச்சி சீரமைக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு ஏற்படாமல் தடுக்க மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது என்றார்.
News November 17, 2025
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இலங்கை அருகே நீடித்து வருகிறது. இக்காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடல்பகுதியை நோக்கி நகர உள்ளது. இதன் காரணமாக இன்று கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழக கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளார்.
News November 17, 2025
குமரி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

கன்னியாகுமரி மக்களே; வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும். மீறினால் கன்னியாகுமரி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000482, 9445000483 என்ற எண்களில் புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.


