News April 13, 2025
இராமநாதபுரம்: திடீர் மின்தடையா? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.SHARE
Similar News
News January 2, 2026
ராமநாதபுரம்: 12th தகுதி… ரயில்வே வேலை ரெடி

ராமநாதபுரம் மக்களே, இந்தியன் ரயில்வேயில் பல்வேறு பணிகளுக்கு 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் <
News January 2, 2026
ராமநாதபுரம்: சிறுவனை கடித்து குதறிய தெரு நாய்

பெரியபட்டினம் தக்வா தெருவை சேர்ந்த 4 வயது சிறுவன் நேற்று முன்தினம் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாகச் சென்ற நாய் ஒன்று சிறுவனின் தாய் கண்ணெதிரே அவரை கடித்து குதறியது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் நாயை விரட்டி விட்டனர். சிறுவனை நாய் கடித்துக் குதறுவது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி பரவியது. சிறுவன் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
News January 2, 2026
ராமநாதபுரம்: ஒரே நாளில் 100 பேர் கைது

தொண்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. அதில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரியும், பேரூராட்சியின் தலைவர் மகன் பேரூராட்சி நிர்வாகத்தில் தலையிடுவதை தடுக்கக் கோரியும் தொண்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு த.மு.மு.க., உள்ளிட்ட பல்வேறு அமைப்பை சேர்ந்த ஏராாளமானோர் முற்றுகையிட்டனர். அனுமதி இல்லாமல் முற்றுகையிட்டதால் 100க்கும் மேற்பட்டவர்கள் மீது தொண்டி போலீசார் வழக்கு பதிந்தனர்.


