News April 23, 2025

இராமநாதபுரம் எஸ்பி அலுவலகத்தில் குறைதீர் முகாம்

image

இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரந்தோறும் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று (ஏப்.23) நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று உடனுக்குடன் தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Similar News

News January 10, 2026

ராமநாதபுரம்: ஒரே நாளில் 14 பேரை கடித்து குதறிய நாய்..!

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பரமக்குடி அருகே மஞ்சக்கொள்ளை கிராமத்தில் நேற்று மதியம் வெறிநாய் ஒன்று தெருவில் சுற்றி வந்துள்ளது. வீட்டு வாசலில் இருந்த பெண்கள், முதியவர்களை துரத்தி துரத்திக் கடித்தது முதியவர்கள் சிலர் தடுக்க முடியாமல் கீழே விழுந்தனர். இரு பெண்கள் உட்பட 14 பேரை நாய் கடித்தது. இவர்கள் அனைவரும் ராமநாதபுரம் GH-யில் அனுமதிக்கப்பட்டனர்.

News January 10, 2026

போலி நிதி நிறுவனங்கள் குறித்து புகார் அளிக்கலாம்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு அங்கீகாரம் பெறாத போலி நிதி நிறுவனங்கள், ஏலச்சீட்டு நிறுவனங்கள், மனை வணிக நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள் ராமநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் மேலச்சோத்துரணி, சக்கரக்கோட்டை என்ற முகவரியில் நேரிலோ அல்லது 94981-07562, 83000-38265 கைப்பேசி எண்களிலோ புகார் தெரிவிக்கலாம் என பொருளாதாரக் குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ராஜமுரளி தெரிவித்தார்.

News January 9, 2026

இராம்நாடு: ரேஷன் கடை குறித்து புகார் அளிக்க!

image

இராம்நாடு ரேஷன் கடைகள் குறித்து புகார் அளிக்க, 1967 அல்லது 18004255901 அழைத்து தெரிவிக்கலாம், அல்லது 044-28592828 (State Consumer Helpline) எண்ணை அழைக்கலாம், மேலும் consumer@tn.gov.in மின்னஞ்சல் முகவரியிலும் புகார் அளிக்கலாம். மேலும், TNPDS இணையதளம் மற்றும் கடைகளில் உள்ள புகார் பெட்டிகள் மூலமாகவும் தெரிவிக்கலாம். உங்க நண்பர்களுக்கும் SHARE செய்து அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!