News May 8, 2025
இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் வேலை

இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் லேப் டெக்னீசியனுக்கு நேர்முகத் தேர்வு நாளை (09-05-2025) நடைபெற உள்ளது. இதற்கு தகுதி உடையவர்கள் தங்களது சுய விவரங்களை (Resume) இன்று (மே.8) இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டாம் தளத்தில் உள்ள அலுவலகத்தில் நேரில் சென்று ஒப்படைக்க வேண்டும் என நிர்வாகம் அறிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க
Similar News
News November 28, 2025
பாம்பன் பகுதி மக்களுக்கு முக்கிய எண்கள் அறிவிப்பு!

பாம்பன் பகுதியில் புயல் காரணமாக கனமழை மற்றும் 60 கிலோ மீட்டருக்கும் மேல் பலத்த சூறாவளி காற்று வீசுகிறது. இந்நிலையில், பாம்பன் ஊராட்சி நிர்வாகம் மற்றும் கடலோசை எப்எம் 90.4 உள்ளூர் சமூக ஆர்வலர்கள் இணைந்து பாம்பு பகுதி மக்களுக்கு பேரிடர் உதவிகள் தேவைப்படுவோருக்கு பிரத்தியேக எண்கள் வழங்கப்பட்டுள்ளது. உதவி வேண்டியவர்கள் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 28, 2025
ராமேஸ்வரத்திலிருந்து சென்னை ரயில்கள் இயங்காது

ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை புறப்படும் ரயில்கள் இன்று மண்டபத்தில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பாம்பன் பாலத்தில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை புறப்படும் அனைத்து ரயில்களும் மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற ரயில்கள் ராமநாதபுரத்தில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 28, 2025
BREAKING ராமேஸ்வரம் பள்ளிகளுக்கு விடுமுறை

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தொடர் மழை காரணமாக ராமேஸ்வரம் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (28.11.2025) ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார் என ராமநாதபுரம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை SHARE செய்து தெரியப்படுத்துங்க.


