News March 14, 2025
இராமநாதபுரத்தில் ரூ.21கோடியில் நாவாய் அருங்காட்சியகம்

தமிழக அரசின் இறுதி பட்ஜெட் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ராமநாதபுரத்தில் சங்க கால பாண்டியர்களின் கடல் வாணிப சிறப்பை விளக்கும் வகையில் ரூ.21கோடியில் நாவாய் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று நிதி அறிக்கையில் தெரிவித்தார். *இராமநாதபுரத்திற்கு புதிய அடையாளம் உருவாதை ஷேர் செய்து ஊர் மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்*
Similar News
News March 14, 2025
ராமநாதபுர மாவட்ட இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (மார்ச்.14) இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
News March 14, 2025
இராமநாதபுரம் பட்ஜெட் அறிவிப்புகள்

▶️ராமநாதபுரத்தில் ரூ.21கோடியில் நாவாய் அருங்காட்சியகம்
▶️ராமநாதபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ரூ.122 கோடியில் புதிய தொழிற்பயிற்சி மையங்கள்
▶️தனுஷ்கோடியில் பறவைகள் சரணாலயம்
▶️ராமநாதபுரத்தில் புதிய விமான நிலையம்
▶️ராமநாதபுரத்தில் புதிய மீன்படி இறங்குதளம்
▶️மீன் பிடி தடைக்கால மானியம் ரூ.8000 ஆக உயர்வு
உங்க ஊர் அப்டேட்ட உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க
News March 14, 2025
தனுஷ்கோடியில் பறவைகள் சரணாலயம் – பட்ஜெட்டில் அறிவிப்பு

தமிழக அரசின் இறுதி பட்ஜெட் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தனுஷ்கோடியில் பறவைகள் சரணாலயம் உருவாக இருப்பதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று நிதி அறிக்கையில் தெரிவித்தார். *இராமநாதபுரம் சுற்றுலா தளத்தில் மேலும் ஒரு புதிய அடையாளம் உருவாதை ஷேர் செய்து ஊர் மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்*