News March 24, 2025
இராமநாதபுரத்தில் கதவுகள் இல்லாத கிராமம்

ராமநாதபுரம், அபிராமம் அருகே பாப்பணம் கிராமத்தில் எந்தவொரு வீட்டிற்கும் கதவுகளே இல்லை என்றால் நம்பமுடிகிறதா?. ஆம், இவர்களின் குலத்தெய்வமான முனியப்பசாமி கோவிலுக்கு தங்கத்தில் கதவு வைக்க முடியாத காரணத்தினால், கதவு இல்லாமல் இருக்கிறது. கோவிலுக்கு கதவு இல்லாததால் தங்களது வீடுகளிலும் கதவு வைக்காமல் உள்ளனர். ஆச்சரியம் என்னவென்றால் இந்த ஊரில் இதுவரை திருட்டும் நடைபெற வில்லையாம். புது தகவல்னா ஷேர் பண்ணுங்க
Similar News
News November 2, 2025
திருச்சி – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்ட நாட்களில் ரத்து

திருச்சி ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் திருச்சியிலிருந்து மானாமதுரை வரை மட்டுமே இயக்கப்படும் மறு மார்க்கமாக மானாமதுரையில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் எனவும் குறிப்பிட்ட நாட்களில் வண்டி எண் : 16845 அதேபோல் வண்டி எண் : 16486 ,16849 ஆகிய ரயில் வண்டிகளும் குறிப்பிட்ட தேதிகளில் இயங்காது என தென்னக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
News November 2, 2025
இராமநாதபுரம்- ஹூப்ளி ரயில் சேவை நீட்டிப்பு

ஹூப்ளி இராமநாதபுரம் வண்டி எண் (07355) ரயில் சேவை வருகிற நவ.29 வாரந்திர ரயில் சேவை சனிக்கிழமை மட்டும், இராமநாதபுரம் ஹூப்ளி ரயில் வண்டி எண்(07356) வருகிற நவ.30 ஞாயிற்று கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் பயணிகளின் வருகை அதிகரிப்பால் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News November 2, 2025
ராமநாதபுரம்: இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

இன்று (நவ.01) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.


