News August 10, 2024
இராமநாதபுரத்தில் ஆக.,31-ல் இருதய மருத்துவ முகாம்

கொச்சி அம்ருதா மருத்துவமனை சார்பில் ராமநாதபுரம் ஆர்.எஸ்.மடை அம்ருதா வித்யாலயத்தில் இருதய நோய் பாதித்த 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் சிகிச்சை பெற விரும்புவோர் 8921508515 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களது குழந்தைகளின் பெயரை முன்பதிவு செய்து பயன் பெறலாம் என அம்ருதா மருத்துவமனை மருத்துவர் பாலாஜி முருகன் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 11, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (நவ.11) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
News November 11, 2025
காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய டிஐஜி

இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் அலுவலகத்தில் இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கான குற்ற நிகழ்வுகள் குறித்த மாதாந்திர திறனாய்வு கூட்டம் இன்று (நவ.11) நடைபெற்றது. இக்கூட்டத்தில் இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு, காவல்துறை துணைத்தலைவர் முனைவர் பா.மூர்த்தி ஐபிஎஸ் அவர்கள் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.
News November 11, 2025
தாய்லாந்தில் பட்டம் வென்ற இராமநாதபுரம் பெண்

முதுகுளத்தூர் அருகே உள்ள தெற்கு காக்கூர் கிராமத்தைச் சேர்ந்த கஜேந்திர பிரபு அல்லிராணி ஆகியோரின் மகள் ஜோதிமலர்(28). பி.டெக் பட்டதாரியான இவர் கடந்த நவம்பர் 8-ம் தேதி தாய்லாந்தில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் இந்திய சார்பில் போட்டியிட்ட ஜோதிமலர் கலாச்சார தூதர் பட்டம் வென்றார். ஜோதி மலர் சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


