News August 7, 2024
இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம்போல தேங்கியுள்ளது. இந்நிலையில் இன்று(ஆக.7) தேனி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 19, 2025
கூடலூர் நகராட்சி கமிஷனர், சுகாதார ஆய்வாளருக்கு பிடிவாரன்ட்

கூடலுார் நகராட்சியில் நவீன எரிவாயு தகன மேடை ஒப்பந்த அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்பட்ட குளறுபடிகள், பாதிப்பிற்கு தீர்வு வழங்க வலியுறுத்தி ஒப்பந்ததாரர் மலைச்சாமி தேனி நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனு அளித்தார். நீதிமன்றத்தில் நேற்று (நவ.18) ஆஜராக நகராட்சி கமிஷனர், சுகாதார ஆய்வாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அவர்கள் ஆஜராகாத நிலையில் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
News November 19, 2025
தேனியில் இன்று இங்கெல்லாம் மின்தடை.!

தேனி மாவட்டத்தில், சின்னமனூர், கம்பம், தேனி, காமாட்சிபுரம் உள்ளிட்ட துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை (நவ.19) புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, மேற்கண்ட பகுதிகளின் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 18, 2025
பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி – ஆட்சியர் தகவல்

அண்ணன் காந்தியடிகள் மற்றும் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளது இதற்காக நவம்பர் 21ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெறும் மேலும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுப்போட்டி நடைபெறும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


