News August 7, 2024
இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம்போல தேங்கியுள்ளது. இந்நிலையில் இன்று(ஆக.7) சிவகங்கை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News October 21, 2025
சிவகங்கை: லஞ்சம் கேட்டால் இதை செய்யுங்க!

சிவகங்கை மக்களே, நீங்கள் சாதி சான்று, குடியிருப்பு சான்று, பட்டா, சிட்டா மாற்றம், வரி செலுத்துதல் போன்ற ஏதேனும் ஒரு பணிக்காக தாசில்தார் அலுவலகம் செல்லும் போது, அங்கு பணிகளை செய்து தர சிலர் லஞ்சம் கேட்க வாய்ப்புண்டு. அவ்வாறு யாரேனும் லஞ்சம் கேட்கும் பட்சத்தில், சிவகங்கை மாவட்ட மக்கள், 04575-240222 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News October 21, 2025
சிவகங்கை மக்களுக்கு எச்சரிக்கை

தேனி மாவட்டம் வைகை அணையில் 69 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதனால் வினாடிக்கு ஆயிரம், கன அடி தண்ணீர் வைகை, ஆற்றில் வந்து கொண்டிருக்கிறது. அதேசமயம் மதுரை ராமநாதபுரம் திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பகுதிகளில் கரையோர மக்கள் மற்றும் பொதுமக்கள் ஆற்றில், இறங்கவோ குளிக்கவோ செல்லக்கூடாது என்று நீர்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
News October 20, 2025
சிவகங்கை மக்களே இனி அலைச்சல் இல்லை

சிவகங்கை மக்களே, உங்களது சொத்து வரி, குடிநீர் கட்டணம், நிலத்தடி கழிவுநீர் வடிகால் வரி, தொழில் வரி செலுத்த அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டும். நீங்கள் https://tnurbanepay.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் மாநகராட்சி மற்றும் நகராட்சி வரிகளை ஆன்லைனில் செலுத்தலாம். மேலும் இதில் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவிறக்கம், வர்த்தக உரிமம் புதுப்பித்தல் போன்ற சேவைகளை பெறலாம். உடனே இத்தகவலை SHARE பண்ணுங்க!