News October 23, 2024
இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (23.10.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 13, 2025
கள்ளக்குறிச்சி: பச்சிளம் குழந்தை பரிதாப பலி!

கள்ளக்குறிச்சி: கிழப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விஜியின், 9 மாத குழந்தை பிரித்திக்காவிற்கு நேற்று(நவ.12) திடீரென காய்ச்சலுடன் வலிப்பு ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, எலவனாசூர்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது, பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 13, 2025
கள்ளக்குறிச்சி: சிசிடிவி பொருத்தியவருக்கு கொலை மிரட்டல்!

கள்ளக்குறிச்சி; சேந்தநாடு கிராமத்தை சேர்ந்த ஆபிரகாம் பிரகாஷ் ஆகியோருக்கு அருகருகே வீடு உள்ளது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஆபிரகாம் பிரகாஷ் தனது வீட்டில் சிசிடிவி கேமரா பொறுத்தியுள்ளார். அதனை அகற்ற கூறி ராமலிங்கம், முகேஷ், சுதா ஆகிய மூவரும் இரும்பு பைப்பை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரில் 3 பேர் மீதும் நேற்று (நவ.12) திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
News November 13, 2025
கள்ளக்குறிச்சி: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (நவ.12) இரவு முதல் இன்று (நவ.13) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


